கும்பகோணத்தை அடுத்த கோவிலாச்சேரியில் அமைந்துள்ள அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் 8 தமிழ்நாடு தேசிய மாணவர் படை இணைந்து நடத்தும் 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு அன்னை கல்வி குழும தலைவர் டாக்டர் .மு. அன்வர் கபீர் அவர்கள் தலைமை ஏற்றார். அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் சீ .பொ. மாணிக்கவாசுகிஅவர்கள் முன்னிலையுரை ஆற்றும் போது மாணவர்கள் பல்வேறு நிலைகளில் தங்களுடைய வாழ்க்கையில் உயர்ந்து நிற்க வேண்டும். விடுதலைக்கு வித்திட்டவர்களை நினைவு கூற வேண்டும். மகாத்மா காந்தி நேரு வ உ சிதம்பரனார் திருப்பூர் குமரன் போன்ற நாட்டிற்கு உழைத்த நல்லவர்களை போற்ற வேண்டும் என்றும் பெண்கள் சமுதாயத்தில் உயர்ந்தவர்களாக நிலைத்து நிற்க வேண்டும் .எடுத்த செயல்பாட்டில் வெற்றியைக் காண வேண்டும் எனக் கூறி சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பேராசிரியர் சோமசுந்தரம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். திருவிடைமருதூர் உட்கோட்டம்
காவல்துணை கண்காணிப்பாளர்
திரு ஜாபர் சித்திக் அவர்கள் தேசியக் கொடியேற்றினார். மேலும் எட்டு தமிழ்நாடு தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு மரியாதையைஏற்றுக்கொண்டார்.விழாவில் சிறப்புரையாற்றும் போது மாணவர்கள், விடுதலைப் போராட்டத்திற்கு தியாகம் செய்தவர்களை இந்த நாளில் போற்ற வேண்டும். வருங்காலத்தில் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும். பல்வேறு துறைகளில் முன்னேற்றம் காண பாடுபடவேண்டும் எனக் கூறி சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.அன்னை கல்விக் குழும செயல் அலுவலர் முனைவர் ராஜ்குமார் அவர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு ரவி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கல்லூரியின் துணை முதல்வர்கள் பேராசிரியர் சி. இளஞ்செழியன் மற்றும் பேராசிரியர் க. ராஜா ஆகியோர் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தனர். நிகழ்ச்சியின் முதலாவதாக நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பேராசிரியர் சோமசுந்தரம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியின் இறுதியாக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் ஆ.வெங்கடேசன் அவர்கள் நன்றியுரை கூறினார் .இதில்தூறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பேராசிரியர் சரண்யா அவர்கள் செய்திருந்தார்.