அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவிளாச்சேரி, கும்பகோணம், நாட்டு நலப்பணித் திட்டம் அலகு- I, II & III ஆல் இன்று 05.06.2021 உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடபட்டது. அதில் தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம், வேடகட்டமடுவு ஊராட்சி, மேல்செங்கப்பாடி கிராமத்தில், பள்ளி, கோவில் மற்றும் சாலையோர பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் முனைவர். ஆ.வெங்கடேசன் தலைமைத்தாங்கினார் மற்றும் சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில்
“இனி ஒரு மரத்தையும் வெட்டமாட்டோம், மீறி வெட்டும் சூழல் ஏற்பட்டால், ஒரு மரத்திற்கு பதில் பத்து மரக்கன்றுகள் நடுவோம்”, என உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இன்று ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினம் அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பேராசிரியர் சோமசுந்தரம் மரக்கன்று நடுகிறார்.